Published : 11 May 2015 10:23 AM
Last Updated : 11 May 2015 10:23 AM

நானும் அரசுப் பள்ளி மாணவன்தான்

நான் ஒரு மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டு, எனது வாழ்க்கையில் 10-ம் வகுப்பைத் தாண்டுவது கடினம் என்று சான்றளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவன்.

பின்பு அரசுப் பள்ளியில் படித்து இன்று கட்டிடக் கலை நிபுணராக உள்ளேன். மேலும், இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளேன். அதில் ஒன்று ஐரோப்பாவில் பயின்று பெற்றது.

எனது ஆய்வுக் கட்டுரை அங்கு சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நான் ஐரோப்பாவில் முதலில் பேசியது எனது அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றித்தான். இந்தச் சமூகத்தில் அரசுப் பள்ளியின் பங்கு மிகப் பெரியது.

வசதி உள்ள, படித்த குடும்பத்தில் ஒருவரைப் படிக்கவைப்பது பெரிய விஷயமல்ல, சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களைக்கூட சமூகத்தின் அங்கமாக்குவதுதான் பெரிய விஷயம். அதைத்தான் அரசுப் பள்ளிகள் செய்கின்றன. ஆனால், அதிலும் குறைகள் உண்டு.

குறைகளைவிட அதன் சமுக பங்களிப்பு மிகப் பெரியது.

செந்தில்குமார்,‘தி இந்து’ இணையதளத்தில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x