Published : 04 May 2015 10:45 AM
Last Updated : 04 May 2015 10:45 AM
‘வளர்ச்சி வேண்டும் என்றால் நிலம் வேண்டும்’ கட்டுரை படித்தேன். நீர்வளம், நிலவளம், கடல்வளம், கனிமவளம், நூற்றுப் பத்துக் கோடிக்கும் மேலான மக்கள் வளம், சரிபாதி இளைஞர்கள் எனக் கொண்ட வளம்மிக்க தேசமிது.
தேவையான பாசன வசதி, இயற்கை வேளாண்மைக்கு ஊக்கம், விளைபொருட்களுக்குச் சரியான விலை, பாதுகாப்பான சேமிப்புக்கிடங்குகள் - இது இன்றைய விவசாயத் தேவை. வளங்களை மக்களுக்கு, நாட்டுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சிலரின் பேராசைக்கு அரசு துணைபோவது நல்லதல்ல.
எந்த ஒரு நாடும் தன் விவசாயப் பரப்புகளை அழித்துவிட்டுத் தன் முன்னேற்றத்தை எழுதிவிட இயலாது.
தன் உடல் பாகங்களைத் தானே தின்று உயிர் வாழ நினைக்கும் கிறுக்குத்தனத்துக்கும், பாஜகவின் நிலப் பிடுங்கல் திட்டத்துக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை!
- பாண்டி,‘தி இந்து’ இணையதளம் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT