Published : 04 May 2015 10:48 AM
Last Updated : 04 May 2015 10:48 AM
ஆங்கிலத்துக்கு இன்றைய சமூகம் கொடுக்கும் முக்கியத்துவம் வேதனையைத் தருகிறது. ஏனென்றால், நவீனப் பெற்றோர் அதை மொழியாகப் பார்ப்பதில்லை.
தங்கள் பிள்ளைகளுக்கு ‘நல்ல சம்பளத்தில்’ வேலை பெற்றுத்தரும் ஊடகமாகவே பார்க்கிறார்கள். ஆங்கிலக் கல்வியை எதிர்த்து முழுக்க தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவது நோக்கமன்று.
எம்மொழியாயினும் அதை ‘வேலை பெறுவதற்கான’ வழியாக மட்டுமே கருத வேண்டாம் எனப் புரிந்துகொள்ளச் செய்வதே இன்றைய அவசியமாக இருக்கிறது.
எந்த மொழியாயினும் அதனால் கிடைக்கும் ‘வணிகப் பயன்பாட்டை’ மட்டுமே கணக்கில் கொள்வதென்பது ஆபத்தான மனநிலையாகும். தாமதம் என்றாலும், இப்போதாவது நாம் விழித்துக்கொண்டால் நல்லது. தங்க. ஜெயராமன் கட்டுரையின் மையச் சிந்தனையும் அதையே முன்வைக்கிறது!
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT