Published : 27 May 2015 11:02 AM
Last Updated : 27 May 2015 11:02 AM
கூட்டணி ஆட்சிகளைச் சமீப காலங்களில் கண்டு பழகிய டெல்லி இன்று ஒரு வலிமை மிகுந்த தலைமையைப் பார்க்கும்போது திகைக்கிறது.
பல முக்கியத் துறைகள் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தமையால் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்தவர்கள், புரோக்கர்கள் இப்போது தவிப்பதுதான் மோடியிடம் அதிகாரம் குவிகிறது என்கிற கூக்குரல். சீதாராம் யெச்சூரி தன்னை ஒரு பெரிய தலைவராக எண்ணிக்கொள்ளலாம், நிசத்தில் 9 இடங்களைப் பெற்றுள்ள ஒரு சிறிய கட்சித் தலைவர்.
அவரைப் பெரிய தலைவராகச் சித்தரிக்கிறது கட்டுரை. இங்கே நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது எதோ பெரிய விஷயம் மாதிரி கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ளார். அமெரிக்காவில் மாகாண கவர்னர் (முதலமைச்சருக்குச் சமம்) நேரடியாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அதுபோலத்தான் இதுவும். இம்மாதிரியான நிகழ்வுகளை தவிர்த்துவிட்டு, ஆட்சியைப் பற்றிய நிறை குறைகளை ஆழ்ந்து சிந்தித்து எழுதலாமே?
- சந்திரா, யு.எஸ்.ஏ. ‘தி இந்து’ இணையதளம் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT