Published : 09 Apr 2015 11:03 AM
Last Updated : 09 Apr 2015 11:03 AM
பின்தங்கிய ராஜஸ்தான் கிராமமான பிபிலாந்திரி, நாட்டுக்கே முன் மாதிரியாகச் செயல்படுவதை, ‘பெண் இன்று' இணைப்பில் இடம்பெற்ற ‘பெண் குழந்தையும் 111 மரங்களும்’ கட்டுரை மூலமாக அறிந்துகொண்டேன்.
அது வரவேற்க வேண்டிய செயலும்கூட. அதோடு மட்டுமல்லாது பெண் குழந்தையின் பெயரில் 21 ஆயிரம் ரூபாயை கிராமப் பஞ்சாயத்து டெபாசிட் செய்வது, தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் அஞ்சலக சேமிப்புத் திட்டமான ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டத்தின் முன்னோடித் திட்டமாகத் தெரிகிறது.
பெண் குழந்தையின் பிறப்பையொட்டி, மரம் நட்டு மண்ணைக் குளிர வைக்கும் இக்கிராம மக்களின் செயல், மரம் நட்டே நோபல் பரிசு பெற்ற வங்காரி மத்தாயியை நினைவூட்டுகிறது.
மத்திய - மாநில அரசுகள் இம்மக்களின் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அக்கிராமத்துக்கு மிகப் பெரிய விருது வழங்கிக் கவுரவிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது நாடு முழுவதும் பல பிபிலாந்திரிக் கிராமங்கள் உருவாகும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT