Published : 20 Apr 2015 10:30 AM
Last Updated : 20 Apr 2015 10:30 AM
‘இந்துத்துவமும் இந்தியத்துவமும்' கட்டுரையைப் படித்தேன். கிரிராஜ் சிங் போன்றவர்களின் அபத்தப் பேச்சு தேவையில்லாதது.
பரந்த மனப்பான்மையையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத்தன்மையையும் போதிக்கும் இந்து மதத்தைச் சார்ந்த, அதுவும் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவரிடமிருந்து இத்தகைய பேச்சு சிறுபான்மைச் சமூகத்தவரை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதைக் கட்டுரையாளர் விவரித்துள்ளார்.
கவிஞர் கண்ணதாசன், “இந்து மதம் பிற மதங்களை வெறுப்பதில்லை. சொல்லப்போனால் எல்லா மதங்களையும் தன்னோடு சமமாகவே கருதுகிறது. மதத் துவேஷம் எந்தக் காலத்திலும், இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டதில்லை.
அதன் பரந்த கரங்கள், அத்தனை மதங்களையும் அணைத்துக்கொண்டே வளர்ந்திருக்கின்றன. ஓர் ஏரியின் நீரைப் போல் பரம்பொருளையும், அதில் இறங்குகின்ற பல படித்துறைகளைப் போல் எல்லா மதங்களையும் பரமஹம்சர் காணுகின்றார். அன்பின் மூலம் அன்பு வளர்வதைப் போல், வெறுப்பின்மூலம் வளர்வதில்லை என்கிறது இந்து மதம்.” எவ்வளவு ஆத்மார்த்தமான வரிகள்!
- கே.பலராமன்,திருவள்ளூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT