Published : 13 Apr 2015 10:34 AM
Last Updated : 13 Apr 2015 10:34 AM
பொருளாதாரரீதியில் பலம் குறைந்த கிராமப்புற மக்கள் பலர் இன்னும் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற முடியாமல் தொடர்ந்து பல இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.
தற்போது மழை பெய்வது குறைந்து, விவசாயம் பொய்த்துப்போன நிலையில்தான் அவர்கள் ஆந்திரத்தில் செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தங்கள் குடும்ப வாழ்வாதாரம் காரணமாகவே அவர்கள் அந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.
எய்தவனை விட்டுவிட்டு அம்புக்குத் தண்டனை அளிப்பது முறையல்ல. 20 உயிர்கள் போய்விட்டன.
அந்தக் குடும்பத்து உறுப்பினர்களுக்கு யார் பதில் சொல்வது? யாராக இருந்தாலும் என்கவுன்டரில் கொல்வது மனிதத் தன்மை ஆகாது. சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT