Published : 30 Apr 2015 10:43 AM
Last Updated : 30 Apr 2015 10:43 AM

நிரூபிக்கப்பட்டாக வேண்டும்

இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் குறித்து சதீஷ் தேஷ்பாண்டே தனது கட்டுரையில் வெளிப்படுத்தும் கவலைகள் நியாயமானதே.

வெறும் சட்ட நுணுக்கங்களும் சட்ட அறிவும் உடைய வல்லுநர் என்பதால் மட்டுமே ஒருவர் சிறந்த நீதிபதியாகிவிட மாட்டார்.

நீதிபதியாக நியமிக்கப்படுபவர், அந்நாட்டின் அரசியல், சமூக அமைப்பு, வர்க்க வேறுபாடுகள், பாலினப் பிரச்சினைகள், வரலாறு, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், மதங்கள், நம்பிக்கைகள், அரசியல் அமைப்பு குறித்த தெளிவான அறிவும் எல்லா சமூகக் கூறுகளையும் பகுப்பாய்வு செய்து அலசும் திறனும் அறிவியல் பார்வையும் அமையப்பெற்றவராகத் திகழ வேண்டும்.

நீதிபதிகளைத் தெரிவு செய்யும்போதே, சட்ட அறிவை மட்டும் சோதித்துப் பார்க்காமல் சமூகம், வரலாறு, பொருளாதாரம், இயற்கை நீதி, இவைகுறித்த புரிதல் உடையவரா என்பதையும் சோதித்து அறிய வேண்டும்.

நீதி வழங்குதல் என்பது எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பானதாகவே அமைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதி மன்றங்கள் உறுதியாக நிற்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உறுதிப்பட்டால்தான், பாதுகாப்பான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்ற உணர்வு நாட்டுமக்களிடம் உருவாகும்.

குடிமக்கள் அனைவருக்குமான ஒரு தேசத்தைக் கட்டமைப்பதில் நீதித் துறை கவனம் செலுத்தும் என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டாக வேண்டும்.

- மருதம் செல்வா,திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x