Published : 22 Apr 2015 10:47 AM
Last Updated : 22 Apr 2015 10:47 AM
விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், டெல்லியில் பேரணி ஒன்றை நடத்தியிருக்கிறது.
அதிமுக தவிர, எல்லா எதிர்க் கட்சிகளும் இன்னும் சொல்லப்போனால், பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் சிவசேனா, பாமக உள்ளிட்ட கட்சிகள்கூட அத்திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறது. கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறது.
எல்லாக் கட்சிகளும் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தைக் கண்டித்து, தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறார்களே ஒழிய, அத்திட்டம் கைவிடப்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. சாதாரண விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் இருக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து ஒரு வலுவான ஆர்ப்பாட்டம் நடத்தினால் மட்டுமே அத்திட்டம் கைவிட வாய்ப்புண்டு.
ஒவ்வொருவரும் தனித்தனியாகப் போராடாமல் எல்லாரும் சேர்ந்து போராடினால் மட்டுமே மக்களின் ஆதரவு கிடைக்கும். இல்லையெனில், வெறும் கண்துடைப்புப் போராட்டமாகவே முடியும்.
- ஹெச். உமர் பாரூக்,வேடசந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT