Published : 01 Apr 2015 11:00 AM
Last Updated : 01 Apr 2015 11:00 AM
இரு கைகளையும் ஒருசேர மேலே தூக்கியபடி பரிதாபத்தோடு நிற்கும் குழந்தையின் முகத்தில் தெரியும் பயத்தைக் கண்டபோது கலங்கிப்போனேன்.
அழுகைக்குத் தயாராக இருக்கும் அந்தக் குழந்தையின் உதடுகளில் தேங்கியிருக்கும் வார்த்தைகளை எவ்வளவு முயன்றும் என்னால் ஊகிக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னை அறியாமலேயே கண்ணீரை வரவழைத்துவிட்ட நிழற்படம் அது.
பல நூறு புத்தகங்கள் சேர்ந்து வெளிப்படுத்திவிட முடியாத தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை அந்தப் படம் எளிதாக விளக்கியதுபோல் இருந்தது.
பூக்களும், காடுகளும், விலங்குகளும், பறவைகளும் மட்டுமே அறிமுகமாகியிருக்க வேண்டிய குழந்தைகள் உலகில், துப்பாக்கிகளும், வெடிச் சத்தங்களும், அழு குரல்களும், சிதறிய உறுப்புகளும் எப்படி அறிமுகமாகின?
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT