Published : 23 Apr 2015 10:37 AM
Last Updated : 23 Apr 2015 10:37 AM
வீட்டில் தனியாக இருக்கும் மூத்தகுடி மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘டயல் 2’ முறை பற்றிய தகவல் நிம்மதியைத்தந்தது.
இதில் பாராட்டத் தக்க விஷயம் என்னவென்றால் ஒரு காவல்துறை அதிகாரி கண்டுபிடித்த திட்டத்தை மேலதிகாரிகள் மனமுவந்து ஏற்றுக்கொண்டு அதைத் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல்தான்.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம், முதியவர்கள் காவல்துறையின் கண்காணிப்பிலேயே இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
முதியவர்களின் பாதுகாப்பு பற்றிய இந்த ‘டயல் 2’ முறையைக் கண்டுபிடித்த எம்.எஸ். பாஸ்கரன் அந்தத் துறையாலும் அரசாலும் பாராட்டப்பட வேண்டும்.
அவரைப் போன்ற திறமையாளர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட வேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி -7.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT