Published : 13 Apr 2015 10:27 AM
Last Updated : 13 Apr 2015 10:27 AM
தமிழ் இலக்கிய உலகின் மகத்தான படைப்பாளிகளுள் ஒருவரான ஜெயகாந்தனின் மறைவையொட்டி, ‘தி இந்து’ கருத்துப் பேழையில் இரண்டு பக்கங்களுக்கு அஞ்சலிக் கட்டுரைகளும், அவரைப் பற்றிய எழுத்தாளர்கள், நண்பர்களின் கருத்துகளும் பிரசுரமானது பெரும் ஆறுதல் தந்தது.
கன்னட எழுத்தாளர் யூ.ஆர். ஆனந்தமூர்த்தி மறைந்தபோது கர்நாடக அரசு 3 நாட்களுக்குத் துக்கம் அனுஷ்டித்தது. ஆனால், தமிழில் சிறந்த நாவல்கள், சிறுகதைகளை எழுதி ஈடிணையற்ற ஆளுமையாக இருந்த ஜெயகாந்தனின் மறைவு குறித்து தமிழக அரசின் சார்பில் அஞ்சலிக் குறிப்போ, இரங்கலோ வெளியிடப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றமளித்தது.
அதேபோல் பெரும்பாலான ஊடகங்களும் அவரது மறைவு குறித்து பெரிய அளவில் ஏதும் செய்யவில்லை. எழுத்தாளர்களை சமூகம் மதிக்க வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால், அதை முன்னெடுக்க வேண்டிய ஊடகங்களும் குறிப்பிடத் தக்க பணிகளைச் செய்யவில்லை என்றால், மக்களையோ அரசையோ குறை சொல்லி என்ன பயன்?
இதுபோன்ற சூழலில் ‘தி இந்து’வில் அவரைப் பற்றிய நினைவஞ்சலிக்காக 2 பக்கங்களை ஒதுக்கியிருப்பதை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இது ஒரு வரலாற்று முன்னுதாரணம் என்றே சொல்ல வேண்டும்.
- தஞ்சை மணிமாறன்,மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT