Published : 22 Apr 2015 10:53 AM
Last Updated : 22 Apr 2015 10:53 AM
கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள லக்ஷ்மி நாராயணன் கோயிலில் இந்துக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘இந்துத்துவம் மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என்று உச்ச நீதிமன்றம் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
எல்லா மதங்களுமே குறிப்பிட்ட வாழ்க்கை முறையை மக்களிடம் போதிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். இதை யாரும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிறப்பு முதல் முதல் இறப்பு வரை மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் திணிப்பது நடந்துகொண்டுதான் உள்ளது. மனித வாழ்க்கை முறையோடு இணைக்கப்படாத எந்த மதமும் காலம் காலமாக உயிரோடு இருக்கவும் முடியாது.
பேரரசர் அசோகரும், கனிஷ்கரும் ஆதரித்த புத்த மதம் ஆசியா கண்டத்தில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் வேரூன்றியுள்ளது. ஆனால், புத்த மதம் தோன்றிய இந்திய மண்ணில் ஏன் வேரூன்ற முடியவில்லை? இந்து மதத்தைப் போதித்தவர்கள் புத்த மதத்தை வேரூன்ற விடவில்லை என்பதுதானே வரலாறு.
இந்துத்துவம் அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளையும், சமமான வாய்ப்புகளையும் அனுபவிப்பதற்கு வழிவகுத்துள்ளதா என்பதுதான் அனைத்து மக்களும் முன்வைக்கும் கேள்வி.
பிறப்பின் அடைப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் இந்த வர்ணாசிரம தர்மத்தை அனைவரும் வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ளவதும்தான் மனிதத்தைப் பேணும் முயற்சியா?
ஜனநாயகத் தன்மையற்ற, ஏற்றத்தாழ்வான, உயர்வு - தாழ்வுகளைத் தர்மம் என்ற பெயரிலும் தலைவிதி என்ற பெயரிலும் மக்களிடையே போதித்து இந்த இழிவுகளை ஏற்றுக்கொண்டு வாழச்செய்வதா அறிவியல் சார்ந்த வாழ்க்கைமுறை?
- சு. மூர்த்தி,ஆசிரியர், காங்கயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT