Published : 11 Apr 2015 10:59 AM
Last Updated : 11 Apr 2015 10:59 AM

டாக்டர் இல்லாத இடத்தில்...

‘நலம் வாழ' இணைப்பில் ‘டாக்டர் தோழனுக்கு 30 வயசு' என்ற கட்டுரையைப் படித்தேன். உலகப் புகழ்பெற்ற ‘டாக்டர் இல்லாத இடத்தில்' புத்தகம் தமிழிலும் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அது தொடர்பாக விரிவாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். இந்தப் புத்தகம் தொடர்பாக அது வெளியான காலத்திலிருந்தே எனக்கும் என் நண்பர்களுக்கும் தெரியும்.

இந்தப் புத்தகம் உள்ளடங்கிய கிராமங்கள், பழங்குடிகள் வாழும் பகுதிகளில் இருப்பவர்களுக்கும் மிகுந்த பயன் அளித்துள்ளது.

அத்துடன் அது வெளியான காலத்தில் செவிலியர் பயிற்சிக்கு உரிய பாடப்புத்தகங்கள் இல்லாததால், இது பாடநூலாகவும் பயன்பட்டுள்ளது. இப்புத்தகம் ஈழப் போர் தொடங்கிய காலத்தில் தமிழர்களுக்குப் பெருமளவு உதவியுள்ளது.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்த பெரும்பாலான மருத்துவர்கள் அப்போது வெளியேறிவிட்டார்கள். அப்போது இந்தப் புத்தகமே அடிப்படை மருத்துவ உதவியாக இருந்துள்ளது என்றும் நண்பர்கள் பகிர்ந்துகொண்டார்கள். இதற்கெல்லாம் மேலாக 50,000 பிரதிகளுக்கு மேல் அப்புத்தகம் விற்றுள்ளதாகவும் கேள்விப்பட்டேன்.

- சு. துரைசாமி,செங்கல்பட்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x