Published : 18 Apr 2015 10:42 AM
Last Updated : 18 Apr 2015 10:42 AM

எளியவர்களின் பள்ளி

ஒரு கட்டிட விபத்தில் இரண்டு குழந்தைகள் இறந்தது வருந்தற்குரியது. அப்பள்ளிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தேன்.

கட்டிடங்கள் பலவும் பராமரிப்பின்றி இருந்தன.எளியவர் குழந்தைகளுக்காகத் தொண்டுள்ளத்தொடு தொடங்கப் பெற்ற இப்பள்ளியின் நிலையைப் போல்தான் பல உதவிபெறும் பள்ளிகளும் உள்ளன.

நிதிவசதி மிக்க பள்ளிகள் சிலவே. பெரும்பான்மையானவை கட்டண வசூல், அரசு மானியம் ஆகியவற்றை நம்பியே தொடங்கப்பெற்று இயங்கி வந்தன. இப்போது இரண்டும் நின்றுவிட்ட நிலையில் பள்ளியை மேம்படுத்தவோ அல்லது இருப்பதைப் பராமரிக்கவோ இயலாது தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

முன்னர் கட்டிடம் கட்ட, பராமரிக்க, சாதனங்கள் வாங்க, நூலகத்தையும் அறிவியல்கூடத்தையும் மேம்படுத்த அரசு மானியம் வழங்கிவந்தது.

அவை நின்ற நிலையில் அரசுப் பள்ளிகளைவிட இவற்றின் நிலை பரிதாபம். அரசின் கொள்கைகள், எளியவர்க்குப் புகலிடமாக இருக்கும் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வித்திடுவது சரியல்ல.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x