Published : 22 Apr 2015 10:49 AM
Last Updated : 22 Apr 2015 10:49 AM

அறிவுத்தாகம் தீருங்கள்

‘கே.என்.ராமசந்திரன் எழுதிய ‘சகோதர மரங்களே வணக்கம்’ கட்டுரை படித்தேன். கட்டுரை மிகவும் அருமை. பேராசிரியர் அவர்களே! தஞ்சை சரபோஜி கல்லூரியில் வேறு வகுப்பில் பாடம் எடுப்பீர்கள். எமது வகுப்பு கொடுத்து வைக்கவில்லை என்று நினைப்போம்.

ஓய்வுபெற்று சென்னையில் வசிக்கிறீர்கள். “வயோதிகம் வாட்டி வதைக்கிறது சரவணன்” என ஓர் அருமையான கடிதம் ஒன்றை இந்த மாணவனுக்கு எழுதியிருந்தீர்கள்.

ஐயா, தங்களைப் போன்ற பேராசிரியர்களைப் பார்ப்பதற்கே கொடுத்து வைக்க வேண்டும். பெருமைப்படுகிறேன். தொடர்ந்து எழுதி எங்கள் அறிவுத் தாகத்தைத் தீருங்கள் ஐயா. என்றென்றும் தங்கள் மாணவன்,

- ஆர். சரவணன்,காலநிர்ணய் தமிழ்ப்பதிப்பு ஆசிரியர், மும்பை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x