Published : 23 Apr 2015 10:34 AM
Last Updated : 23 Apr 2015 10:34 AM

சரஸ்வதி நதியும் சரித்திரமும்

கருத்துப் பேழை பகுதியில் வெளியான 'எங்கேதான் இருக்கிறது சரஸ்வதி நதி?' கட்டுரை வரலாற்று ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட பதிவு.

1999-ல் என்.எஸ்.ராஜாராம், டாக்டர் நட்வர்ஜா இருவரும் சேர்ந்து எழுதிய ‘தி டீஸைஃபர்டு இன்டஸ் ஸ்கிரிப்ட்’ (The Deciphered Indus Script) எனும் நூலில் ரிக் வேதம் பிறந்த இடம் சிந்து - சரஸ்வதி சமவெளிப் பகுதியே என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

அதேபோல், சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் குதிரைகள் கிடையாது. ஒற்றைக் கொம்புடைய காளை பொறிக்கப்பட்ட உடைந்த முத்திரையைக் கணினி உதவியுடன் குதிரை போல் காட்டி மோசடி செய்திருப்பதை ஹார்வர்டு பல்கலைக்கழக சமஸ்கிருத பேராசிரியர் மைக்கேல் போன்றவர்கள் அம்பலப்படுத்தினார்கள்.

குதிரை முத்திரை உண்மையானதுதான் என நிரூபித்தால் 1,000 டாலர்கள் பரிசு அளிப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

ஆனால் இன்று வரை அந்தப் பரிசைப் பெற எவரும் வரவில்லை. வரலாற்று அறிஞரான ரொமீலா தாப்பர் ‘இந்துத்துவாவும் வரலாறும்’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் “இந்துத்துவா தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள், ஆரியர்கள் அந்நியப் படையெடுப்பாளர்கள் என்பதை மறைக்க விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சிதான் சரஸ்வதி நதிகுறித்த சர்ச்சை.

- பொ. நடராசன்நீதிபதி (பணி நிறைவு), ‘தமிழகம்’ உலகனேரி, மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x