Published : 06 Apr 2015 10:52 AM
Last Updated : 06 Apr 2015 10:52 AM
மனித நேயம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதால், பாகிஸ்தானில் இந்துக்களின் ஹோலி பண்டிகையின்போது இஸ்லாமிய இளைஞர்கள் பாதுகாப்பு அளித்தது, மனித நேய நிகழ்வுக்கு மகத்தான உதாரணம்.
தற்போது நெல்லையில் நடைபெற்ற பாகிஸ்தான் பண்பாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற வேண்டும்.
நம்மில் பேதமில்லை, பேதமாய் நினைப்பவர்கள் மனித இனத்தவர்கள் இல்லை.
- செய்ல்ஸ் அஹமத்,தோஹா.
***
‘பாகிஸ்தானில் இந்துக்களைப் பாதுகாத்த முஸ்லிம்களுக்கு நெல்லையில் பாராட்டு’ செய்தி, மதம் கடந்தும் நாட்டு எல்லைகள் கடந்தும் மகத்தான மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதையே நமக்கு உணர்த்துகிறது. இந்தச் செய்தி மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் இதமாகவும் உள்ளது.
‘இஸ்லாத்தின் மஹிமை’ என்ற தலைப்பில் 20.06.1920-ம் வருடம் பொட்டல்புதூரில் பாரதியார் ஆற்றிய உரை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அந்த வழியில்தான் பொட்டல்புதூர் இன்றும் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
- கோ. விஜயராமலிங்கம், பூண்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT