Published : 24 Apr 2015 10:43 AM
Last Updated : 24 Apr 2015 10:43 AM
மாயா பஜார் இணைப்பில் இடம்பெற்ற உலகப் புத்தக நாளுக்கான ‘பேனா பிடித்த பிஞ்சுக் கைகள்' கட்டுரை, எழுத்தாளராவது பெரிய விஷயமல்ல என தன்னம்பிக்கையூட்டியது.
சிறு வயதில் எழுத்தாளராகிய ரவீந்திரநாத் தாகூர், ஆன்ஃபிராங்க் ஆகியோரின் வரலாறு அதற்கு வலுசேர்ப்பதாக அமைந்தது. குறிப்பாக, ஆசிரியர்கள் பிள்ளைகளுக்குக் கட்டுரை எழுதப் பயிற்சி அளிக்கும்போது, மாணவர்களுக்கு அக்கட்டுரை பற்றிய செய்திகளை வாய்மொழியாக வழங்கி, அவர்களின் சொந்த நடையில் எழுத அனுமதிக்க வேண்டும்.
அப்படி எழுதும் கட்டுரைகளை மாணவரை அருகில் வைத்துக்கொண்டு இதை இப்படி எழுதலாம். இங்கு இந்த மேற்கோளைச் சேர்க்கலாம் என ஆலோசனை வழங்கி, திருத்தி மீண்டும் எழுத வைக்கலாம்.
அதைப் போலவே மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கொடுத்து, ஒருமுறைக்கு இருமுறை எழுதி வாசிக்கச் செய்தால் அவர்களுக்கே அவர்கள் எழுதியதில் உள்ள சரியில்லாத பகுதிகள் புரியவரும்.
இந்த நடைமுறையை ஒவ்வொரு ஆசிரியரும் பின்பற்றினால் ஒவ்வொரு மாணவரும் எழுத்தாளராவது நிச்சயம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT