Published : 06 Mar 2015 10:58 AM
Last Updated : 06 Mar 2015 10:58 AM
‘கேஜ்ரிவால்: தலைவரா, சர்வாதிகாரியா?’ கட்டுரை நல்ல அலசல். நேர்மையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் தனிநபர்கள்கூட கடும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒரு குழுவாக, அமைப்பாக, அரசியல் கட்சியாகச் செயல்படும்போது பல்வேறு எண்ண ஓட்டங்களையும் சமன் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். லட்சிய வாழ்க்கைக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் கடக்க முடியாத தூரம் இருக்கிறது.
இந்தச் சவாலை எதிர்கொண்டு குறைந்தபட்ச லட்சியவாதியாகவேனும் மாறுவதுதான் சிறந்த தலைமையின் அடையாளமாக இருக்க முடியும்.
கேஜ்ரிவால் செல்ல வேண்டிய திசை அதுதான். டெல்லிவாழ் மக்கள் ஆஆக-வின் கொள்கை மற்றும் நேர்மையை நம்பியே பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றனர். அதற்குச் சேதாரம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அக்கட்சியின் தலையாய கடமை!
- கே. எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT