Published : 11 Mar 2015 10:43 AM
Last Updated : 11 Mar 2015 10:43 AM
தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றிய இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார்.
மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவது சரியல்ல என்றும் சுட்டிக் காட்டியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இதுவரை தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன இலங்கை அரசு என்ன பதில் சொன்னது என்பதையும், இனிமேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதத்தை அந்நாட்டு அரசு தந்ததா என்றும் அவர் விளக்கவில்லை.
இருதரப்பு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, தீர்க்கமான முடிவு எட்டப்படும் வரை அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
- ஆர். விஜய்ராஜ்,திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT