Published : 20 Mar 2015 02:42 PM
Last Updated : 20 Mar 2015 02:42 PM
டிராஃபிக் ராமசாமியின் சமூகப் பணி வெகுவாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாம், அடிப்படைப் பண்பாட்டு, ஒழுக்க விஷயங்களில் காட்டுமிராண்டிகளாக ஆகிக்கொண்டிருக்கிறோம். மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் வர வரக் குறைந்துவிட்டது. நம் மக்களுக்குப் பணம் மட்டுமே பிரதானம் ஆகிவிட்டது. அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற மனநிலையும் வந்துவிட்ட பின்னர், குறைந்தபட்ச மனசாட்சிக்கு எங்கே போவது? இந்நிலையில், தன்னலம் இல்லாமல் உழைக்கும் டிராஃபிக் ராமசாமி போன்ற உன்னத மனிதர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நாம் அவருக்கு ஆதரவாகத் திரண்டு நின்று உதவ வேண்டும். வருங்காலச் சந்ததியாவது குறைந்தபட்ச மனசாட்சியோடு இருக்க வேண்டுமானால், இப்போதே பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஒழுக்கக் கல்வியையும் சமூகக் கல்வியையும் எந்தவித மதச்சார்பும் இல்லாமல், தேச பக்தியுடன் அளிக்க வேண்டும். அப்போதுதான் வருங்கால இந்தியாவில் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அரசு ஆவன செய்யுமா?
- ஜோ, திருச்செங்கோடு.
உண்மையில் இந்தச் செய்தியைப் படிக்கும்போது என் கண்கள் கலங்கிவிட்டன. ‘‘இந்த நாட்டைத் திருத்தவே முடியாது... வேண்டாம் வந்துடுங்கப்பா!’’ என்று சொன்ன ஒரு அன்பு மகளின் பேச்சு, மனதின் உண்மையான குரல். அது உண்மையும்கூட! ஆனால், இப்படியே அனைவரும் சிந்தித்து விலகிச் சென்றால் நாடு என்னவாகும் என்பதும் சிந்திக்க வைக்கும் ஒரு நல்ல கேள்விதானே?
- கே. மஹேந்திரபிரபு, ‘தி இந்து’ இணையதளத்தில்…
டிராஃபிக் ராமசாமி, “அவங்களுக்குப் பிரச்சினை வேண்டாம்னுதான் குடும்பத்தைவிட்டு ஒதுங்கிட்டேன். எனக்கு மட்டும் பாசம் இல்லையா? ஆனா, அவங்க மட்டுமா என் குடும்பம்? இந்தச் சமூகமே என் குடும்பம் இல்லையா... நான் பெத்த குழந்தைகளைப் படைச்சவன் பார்த்துப்பான்” என்கிறார் யதார்த்தமாக.
- ஜான்சன் பொன்ராஜ், ‘தி இந்து’ இணையதளத்தில்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT