Published : 02 Mar 2015 10:40 AM
Last Updated : 02 Mar 2015 10:40 AM
இந்த நிதிநிலை அறிக்கையில், சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் கூறியிருப்பது போல், சர்வதேசப் பொருளாதார நிலையில் ஏற்பட்ட வளர்ச்சியின் பயனால், தற்போது இந்தியப் பொருளாதாரம் முன்னேறியிருக்கிறது.
இருப்பினும், மாதாந்திர ஊதியத்தை மட்டுமே நம்பி திட்டமிடும் பல கோடி நடுத்தர மக்களுக்கான நேரடி வரிவிதிப்பில், எதிர்பார்த்த சலுகைகளைத் தரவில்லை. மேலும், 14 சதவீதமாக சேவை வரியை உயர்த்தி இருப்பதும், அதற்கு மேல் 2 சதவீதம் தூய்மை இந்தியா திட்டத்துக்கான சேவை வரி விதிப்பும் பெரும் சுமைதான்.
பிரதமர் கையிலுள்ள முதிய குடிமக்கள், ஓய்வுதியதாரர்களுக்கு எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நிதிநிலை அறிக்கையைக் காண முடிகிறது.
- கு.மா.பா.திருநாவுக்கரசு,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT