Published : 11 Mar 2015 10:40 AM
Last Updated : 11 Mar 2015 10:40 AM

மனநிலையை மாற்றுவோம்

‘ஆண்களின் மனநிலையை என்ன செய்வது?’ எனும் அலசல் கட்டுரை அருமை. ஆணாதிக்க மனநிலை என்பது ஆண்களிடம் மட்டுமே இருப்பதில்லை.

இந்தச் சமூகம் வளர்த்தெடுக்கும் பெண்களின் மனதிலும் ‘தாங்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் அல்ல’ என்பதைப் பதியவைக்கிறது. பெண்கள் என்றால் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் என்பது ஆண்களின் மனதில் சிறுவயதில் இருந்தே விதைக்கப்படுகிறது.

நடிகை ரோஹிணி கூறுவதைப் போல, நமது சமூகத்தைத் தொற்றியிருக்கும் இந்த நோயின் அறிகுறிகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கான சமூகக் காரணிகளைக் களைவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டியது முக்கியம்.

- ஆர். சுமித்ரா,திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x