Published : 28 Mar 2015 10:48 AM
Last Updated : 28 Mar 2015 10:48 AM

தி.க.சி. சில நினைவுகள்

சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் சிறந்த விமர்சகருமான காலம் சென்ற தி.க. சிவசங்கரன் (தி.க.சி.) முதலாம் ஆண்டு நினைவு நாள் மார்ச் 25.

அவருடைய நினைவுகளை ‘தி இந்து’ வாசகர்களுடன் அவர் மறைந்த இம் மாதத்தில் பகிர்ந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும். தி.க.சி-யின் முதல் படைப்பு ‘பிரசன்ன விகடனில் 1942-ல் வெளியானது.

இவருடைய ‘இலக்கிய விமர்சனம்’ என்ற நூலுக்கு 2000-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. வல்லிக்கண்ணன் மற்றும் தொ.மு.சி. ரகுநாதன் இவரது சிறந்த நண்பர்கள்.

மணிக்கொடி நிறுவனர் வ.ரா. ஜீவானந்தம் மற்றும் புதுமைப்பித்தன் இவரைக் கவர்ந்த எழுத்தாளர்கள் ஆவர். ‘தமிழில் விமர்சனத் துறை-சில போக்குகள்’ என்ற தி.க.சி-யின் நூலுக்கு தமிழக அரசால் ஏப்ரல் 2003-ல் விருது வழங்கப்பட்டது. தி.க.சி. மார்ச் 25, 2014 அன்று இயற்கை எய்தினார்.

- ஜி. புருசோத்தமன்,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x