Published : 18 Mar 2015 10:43 AM
Last Updated : 18 Mar 2015 10:43 AM
மேற்கு வங்கத்தில் 72 வயது கன்னியாஸ்திரி சில மனித மிருகங்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நமக்குத் தலைக்குனிவையும் அவமானத்தையும் தேடித் தந்துவிட்டது.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ‘என் இதயம் நொறுங்கிவிட்டது. அவர்களை மன்னித்து விடுங்கள்’ என்று கதறியிருக்கிறார். அவரது கதறல் ஒட்டுமொத்த இந்தியர்களின் மனங்களை நொறுக்கிவிட்டது. கிறிஸ்தவ மெஷினரிகள் இந்தியாவில் கல்வித் துறையில் செய்த சேவையும் போர் நடக்கும் இடங்களில் அவர்கள் செய்த தொண்டும் நாம் நன்றியுடன் பாராட்டப்படக் கூடியவை.
பாதிக்கப்பட்ட நிலையிலும், அந்த கன்னியாஸ்திரி பள்ளி மாணவ - மாணவிகளைப் பற்றியே கவலைப்பட்டது நம் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை மிகச் சாதாரணமாகப் பாலியல் பலாத்காரச் சம்பவம் என்று எடுத்துக்கொள்ளாமல், இந்த அநாகரிகச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்குத் தக்க தண்டனை அளிப்பதோடு, மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமை.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.
***
உடனடி தண்டனை
மிருகத்தனமான செயல்... பாலியல் பலாத்காரக் குற்றவாளிகள் தைரியமாகப் பேட்டி கொடுக்கும் அளவுக்கு நீதித் துறை மெத்தனமாக இருக்கிறது. இது போன்ற கொடூரமானவர்களுக்குப் பரிந்துகொண்டு வாதாடும் வழக்கறிஞர்களும் பலாத்காரக் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையானால் மட்டுமே, குற்றத்துக்கான தண்டனைகள் உடனடியாக கிடைக்கும் நிலையில் மட்டுமே சட்டத்தை நிலைநாட்ட முடியும். மக்கள் இது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடினால் மட்டும் போதாது, இவர்களுக்காகப் பரிந்துபேசும் வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் போராட வேண்டும்!
- குமார்,‘தி இந்து’ இணையதளத்தில்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT