Published : 30 Mar 2015 10:54 AM
Last Updated : 30 Mar 2015 10:54 AM
இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துக்களும், சாலை உயிரிழப்புக்களும் நடைபெறும் முதன்மை மாநிலமாக தமிழகம் பல வருடங்களாகத் திகழ்ந்துவருகிறது.
சாலைகளைச் செப்பனிட்டு முடித்து, சில மாதங்களிலேயே சாலைக் கட்டணங்களை அதிகரித்துக்கொண்டே செல்லும் தனியார் நிறுவனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. நாளுக்கு நாள் ஆயிரக் கணக்கில் அதிகரித்துவரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டணங்கள் குறைவதற்குப் பதிலாக ஏன் அதிகரித்துகொண்டே செல்கிறது?
தரமற்ற சாலைகள், ஊழல் மலிந்த போக்குவரத்து உரிமத் துறை, வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் தள்ளாட வைத்திருக்கும் அரசு - இப்படிக் குளறுபடிகள் நிறைந்த பயணம்? ஏணிகளே இல்லாத இந்த பரமபதப் பயணத்தில் இன்னும் எத்தனை பாம்புகள் கடிக்குமோ?
- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT