Published : 25 Mar 2015 10:51 AM
Last Updated : 25 Mar 2015 10:51 AM
‘தார்மிகக் கோபமும் அறிவுதான்’ - அருமையான கட்டுரை மட்டுமல்ல, அவசியமான கட்டுரையும்கூட. “விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு அறிவு காரணமாக இருக்கலாம்.
ஆனால், உணர்ச்சிதான் பிரதானமாக இருக்கிறது” என்று சொல்லி, ஆர்கிமிடிஸ் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது குளியலறையில் இருந்து, ‘‘நான் கண்டுபிடிச்சிட்டேன்… நான் கண்டுபிடிச்சிட்டேன்!’’ என்று ஓடியதை நினைவுகூர்வார் ரசிகமணி டி.கே.சி..
ஒரு பெருந்தனக்காரர் தன்னுடைய பெண்ணைத் தாவரவியல் படிக்க வைக்க அமெரிக்கா அனுப்பவிருப்பதாகவும் அவளை ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் ரசிகமணி இல்லத்துக்குக் கூட்டி வந்துள்ளார். ரசிகமணியோ ‘‘பேஷ் பேஷ்..! இங்குள்ளவர்கள் தாவர இனத்தை நேரில் தொட்டுத் தொட்டுப் படிப்பார்கள்.
உங்கள் பெண் அமெரிக்காவில் நான்காவது மாடியில் இருந்துகொண்டு அமுக்கப்பட்ட (pressed species) தாவர இனத்தைப் படிப்பாள். ‘‘பேஷ், பேஷ்” என்றதும் அந்தப் பெருந்தனக்காரர் தன் பெண்ணை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டார்.
இயற்கையோடு இயைந்த கல்விதான் சிறக்கும் என்பதைச் சொன்னதோடு, செயற்கையான கல்வியால் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லியுள்ளார் ரசிகமணி டி.கே.சி. மரம், செடி, கொடிகளும் மனிதனோடு உணர்வு பூர்வமாக இருக்கின்றன என்பதை இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது.
- இரா. தீத்தாரப்பன்,மேலகரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT