Published : 13 Mar 2015 10:55 AM
Last Updated : 13 Mar 2015 10:55 AM
பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு இது போதாத காலம்போலும்.
பூசல்களுக்குக் காரணம், கட்சியில் தலைதூக்கிவரும் ‘தனிமனித ஆதிக்கம்’ என்றே சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும், தலைவர்கள்மீது வீசப்படும் குற்றச்சாட்டுக்கள், ஆம் ஆத்மிக்குப் பெரும்பான்மை அளித்த டெல்லிவாசிகளின் நம்பிக்கையைத் தகர்ப்பதாகவே தெரிகிறது.
ஆகவே, ஊடகங்களில் வசைபாடும் தலைவர்கள் பிரச்சினைகளை நான்கு சுவர்களுக்குள் பேசுவதே சிறந்தது. இல்லையெனில், சிறந்த ஆட்சியை அளிப்பேன் என்ற உறுதிமொழி கானல் நீராகிவிடும் வாய்ப்புகளே அதிகம்.
- கி. ரெங்கராஜன்,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT