Published : 24 Mar 2015 10:28 AM
Last Updated : 24 Mar 2015 10:28 AM

நடத்துநர் மனநிலை

‘அரசுப் பேருந்துகளில் தீர்வில்லாமல் தொடரும் சில்லறைப் பிரச்சினை...' இது விரைவில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு பேருந்தும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைச் சுமந்து செல்கிறது.

ஒவ்வொரு பயணியிடமும் செல்லும் இடம் கேட்டு, பயணச் சீட்டு கொடுத்து, பணம் பெற்று மீதி சில்லறையைக் கொடுக்க வேண்டும்.

அதற்குள், அடுத்த இடம், அடுத்த பயணிகள் என்று தொடர்ச்சியாக அவர்கள் இயங்க வேண்டியுள்ளது. 6 ரூபாய் பயணச் சீட்டுக்கு வரிசையாக எல்லோரும் 10 ரூபாய் கொடுத்தால் நடத்துநர் மீதி 4 ரூபாய் கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுவார் என்பது, நடத்துநரின் மனநிலையில் இருந்து பார்த்தால்தான் புரியும்.

இந்நிலையில், சரியான ஓய்வோ விடுப்போ கிடைக்காமல் மன அழுத்தத்தில்தான் பலரும் பணிபுரிகிறார்கள். பயணிகளும் குறைந்தபட்சம் சில்லறை கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அதிகாரிகளும் இதற்குத் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்.

- ஜேவி,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x