Published : 25 Feb 2015 10:51 AM
Last Updated : 25 Feb 2015 10:51 AM
கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் லாபம் பெறுவதற்காக மோடி அரசு பொது சுகாதாரத் துறையில், 2014-15க்கான பட்ஜெட்டில் 20% நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது.
ஏற்கெனவே உலக அளவில் இந்தியாவில்தான் சுகாதாரத்துக்கு பட்ஜெட்டில் மிகக்குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் வந்த ‘இதயத்தைச் சுரண்டாதீர்’ என்னும் தலையங்கம் மிகவும் பொருத்தமானது.
மத்திய, மாநில அரசுகள், கான்ட்ராக்ட் முறைகள் மூலமும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பேரிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஊக்கம் அளிக்கின்றன.
அரசு மருத்துவமனைகளிலும்கூட உபயோகிப்பாளர் கட்டணம் என்னும் பேரில் அரசாங்க கஜானாவை நிரப்புவதற்கு மக்களிடம் பணம் பறிக்கின்றனர்.
இன்று மருத்துவத் துறை 85% தனியார் மயம் ஆக்கப்பட்டிருப்பது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான். இவ்வாறு மருத்துவத் துறை தனியார் மயம், வணிக மயமாக்கப்படுவது ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவியின்றி நோயினால் மடிவதற்கே காரணமாக அமையும்.
- மா. சேரலாதன்,மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT