Published : 27 Feb 2015 10:25 AM
Last Updated : 27 Feb 2015 10:25 AM
கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு இந்தியா என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்தாலும், உண்மையில் கருத்துச் சுதந்திரத்தில் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்று கட்டுரை ஆசிரியர் ராமச்சந்திர குஹா எடுத்துக்காட்டும் 7 அச்சுறுத்தல்களும் மிகப் பொருத்தமானவை.
ஆளும் கட்சியைத் தாக்கி யாராவது பேசிவிட்டால், பேசியவருக்கு எதிராக மான நஷ்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் அலைக்கழிக்கப்படுவதால் அவர்கள் செயலிழந்துவிடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
மேலும், காவல் துறையையும் ஆளும் கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
- கே. பி. எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT