Published : 17 Feb 2015 10:46 AM
Last Updated : 17 Feb 2015 10:46 AM

வாக்கு தீர்மானிக்கக் கூடாது

குழந்தைகளிடம் உறைந்துள்ள அபார இசைத் திறமையை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறப்பாக வெளிப்படுத்துகிறது. நூற்றுக் கணக்கான பாடல்களை மனனம் செய்து, தங்குதடை இல்லாமல் பாடுகிற குழந்தைகள் பெரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

விவாதத்துக்கு நிறைய தவறுகள் இருந்தபோதிலும் வரவேற்கத் தக்க நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. மக்கள் வாக்கு மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது நெருடலாக இருக்கின்றது.

வசதிமிக்கவர் திரட்ட முடிந்த வாக்குகளை எளியவர் பெற இயலாது என்பதை அனல் ஆகாஷ் நீக்கப்பட்டதிலிருந்து அறியலாம். நிகழ்ச்சியைப் பார்க்காமலே வாக்களிக்க முடியும் என்பதும், ஒருவர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் வாக்களிக்கலாம் என்பதும் வாக்களித்தவரது அடையாளம் தெரியாதிருப்பதும் நிகழ்ச்சியையே கேலிக்கூத்தாக்கியுள்ளது.

இசை வல்லுநர்கள் தீர்மானிப்பதே நேர்மையானதாக இருக்கும். வல்லான் வகுத்த வாய்க்காலாக மாறி, ஒரு நல்ல நிகழ்ச்சியின் முடிவு வருந்தத் தக்கதாகப் போய்விடக் கூடாது.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x