Published : 27 Feb 2015 10:27 AM
Last Updated : 27 Feb 2015 10:27 AM

வெப்பத்தைத் தணிக்கும் தர்பூசணிக்கும் வந்தது வேட்டு

வெயில் காலம் வந்ததும் வெப்பத்தைத் தணிப்பதற்காகப் பல்வேறு இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்களை வாங்கி அருந்துகின்றனர். இளநீர், நுங்கு, மோர், குளிர்பானம், பழச்சாறு, கரும்புச் சாறு, சர்பத், கம்பங்கூழ், தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை வாங்கிச் சாப்பிடுகின்றனர்.

இவற்றில் முதலிடம் வகிப்பது தர்பூசணி. இது விலை குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் சுலபமாகவும் கிடைக்கக்கூடியது.

இருந்தாலும், இதையும் மனநிறைவுடன் சாப்பிட முடியாத அளவுக்கு, தர்பூசணிக்குள் ஊசி மூலம், சிவப்பாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனத் திரவத்தைச் செலுத்துகிறார்கள். இந்தத் தகவல்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன. சுகாதாரத் துறை உடன் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்க வேண்டும்.

- அ. அப்பர்சுந்தரம், சமூக ஆர்வலர் ,மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x