Published : 25 Feb 2015 10:52 AM
Last Updated : 25 Feb 2015 10:52 AM
‘மும்பை போல மதுரை அங்காடி இரவு முழுவதும் செயல்படுமா?’ - செய்தி சிந்திக்கத் தக்கது. மும்பை அமைப்பு வேறுபட்டது. மக்கள் பலதரப்பட்டவர்.
மும்பை விரிந்த விசாலமான இடம். கடற்கரை ஒன்றே அதன் அழகுக்குச் சாட்சி. ஆனால், மதுரையில் இரவு முழுவதும் கடைகள் திறந்திருந்தால் பல விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படலாம். பழைய மதுரையைப் பற்றி இப்போது இருப்பவர்கள் பேசுகிறார்கள்.
டாஸ்மாக் கடைகள் அளவுக்கு அதிகமாகப் பெருகிவிட்ட நிலையில், இரவு முழுவதும் கடைகள் திறந்திருப்பது சாத்தியமன்று. சங்க காலத்தில் உள்ள மதுரை மறைந்துவிட்டது. மதுரா கோட்ஸ் வாயில் அடைக்கப்பட்டுவிட்டது.
பழம் பெருமை பேசி என்ன பயன்? தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வர்த்தகக் கணக்கு போடுபவருக்கு மக்களின் வாழ்க்கைக் கணக்கு புரியவில்லை. மும்பையும் மதுரையும் ஒன்றல்ல. வியாபாரம் அதிகமாக இந்த உத்தி பயன்படாது. தூங்கா நகரம் தனது பொலிவிழந்து வருடங்கள் பல ஆகிவிட்டன. வர்த்தகம் பெருக வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா என்று சிந்தியுங்கள்.
- மைதிலி நாராயண்,மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT