Published : 23 Feb 2015 11:13 AM
Last Updated : 23 Feb 2015 11:13 AM
பொதுத் தேர்வுகள் நெருங்கும் சமயத்தில் மாணவர்களுக்குத் தேவையான மன, உடல் நலம் சம்பந்தமான விஷயங்களை எல்லாப் பத்திரிகைகளும் போட்டி போட்டு வழங்குகின்றன.
நல்ல விஷயம்தான். ஆனால், இதில் நினைவுகூர வேண்டிய விஷயம் - மாணவர்கள் எந்த அளவு பதற்றமாக இருக்கிறார்களோ அதே அளவு ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள
். மாணவர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு முறை (பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ) வருகின்ற இந்த வேள்வி, ஆசிரியர்களுக்கு வருஷாவருஷம் வருகிறது. தேர்வு நேரத்தில் தங்களையும் கவனித்துக்கொள்ளாத, குடும்பத்தையும் கவனிக்க முடியாத ஆசிரியர்கள் ஏராளம்.
இதனால், குற்ற உணர்ச்சியில் தவித்துப்போகிறார்கள். அதனால், ஆசிரியர்களுக்கும் ஆலோசனை தர வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருமே உடல், மன நலத்துடன் இருந்தால்தான் தேர்வுகளும் சந்தோஷமாக இருக்கும்.
ஜே. லூர்து,மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT