Published : 01 Jan 2015 11:33 AM
Last Updated : 01 Jan 2015 11:33 AM
ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே செயல்படாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது. பேருந்துகள் ஓடாததால் நேற்று ஒருநாள் மட்டும் பல கோடி ரூபாய் நஷ்டம். இதில் கடும் பாதிப்புக்குள்ளானது மக்கள்தான். போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண்பதுடன், இதுபோன்ற சமயங்களில் மக்கள் அவஸ்தைக்குள்ளாகாமல் பார்த்துக்கொள்வதும் அரசின் கடமை.
- கி. ரெங்கராஜன்,சென்னை.
கோரிக்கைகளை வலியுறுத்திப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடும் என்று முன்பே தகவல்கள் வந்த பின்பும்கூட, அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. போக்குவரத்து சேவை என்பது ஒரு மாநிலத்தின் ரத்த நாளம் போன்றது. போக்குவரத்துச் சேவை நிறுத்தப்படும் சமயங்களில் மாநிலத்தின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பைச் சந்திக்கும். எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
- கே. எஸ். முகமத் ஷூஐப்,
காயல்பட்டினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT