Published : 03 Jan 2015 10:48 AM
Last Updated : 03 Jan 2015 10:48 AM
கடந்த 2014-ம் ஆண்டின் தருணங்களை அவ்வளவு சுலபமாக நம்மால் மறக்க முடியாது. இருப்பினும், 2015 தொடங்கி இனி வரும் ஆண்டுகளிலாவது, போரினாலும் வன்முறையாலும் பயங்கரவாதத்தினாலும் எதிர்பாராத உயிர்க்கொல்லி நோயினாலும் இழந்த எண்ணற்ற உயிர்களைக் கணக்கில்கொண்டு மனிதாபி மானத்தோடு வாழ முயற்சிக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகள் ஆயுதங்களையும் போரையும் முற்றிலும் ஒழித்து, கால தாமதமானாலும் பேச்சுவார்த்தை மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். வறுமையை முற்றிலும் ஒழிக்க, பொருளாதார உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
புவி எங்கும் பெண்களுக்கான கல்வியை மட்டுமல்ல, அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரும் வகையில், காலத்துக்கேற்பச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததிகளுக்கு அமைதியான, இயற்கைச் சூழல்கள் நிறைந்த ஒரு உலகைக் கொடுக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டால், உலகெங்கும் அமைதியான சூழல் நிலவும்.
- பி. நடராஜன்,மேட்டூர்அணை.
தொடரும் சர்ச்சைகள்
‘2014: தமிழகம் கண்ட சுற்றுச்சூழல் சர்ச்சைகள்’ கட்டுரையில் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டிருக்கும் இன்றைய அரசுகளுக்கு, அதனால், பாதிக்கப்படும் மக்களைவிட வளர்ச்சியே முக்கியம். மக்களைப் பற்றியே கவலைப்படாதவர் கள் சுற்றுச் சூழல் பற்றியா கவலைப்படப் போகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களைத் தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், கிடைக்கும் சொற்பப் பணத்துக்காக மக்களின் வாழ்வாதாரங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்!
சாந்தப்பன்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT