Published : 24 Jan 2015 11:22 AM
Last Updated : 24 Jan 2015 11:22 AM

நிறைவுடன் நிறைவடைந்தது

“இவ்வளவு வாசகர்களா?” என்று இன்னும் எழுத வேண்டும் என எழுத்தாளர்களுக்கு உற்சாக டானிக் ஊட்டியிருக்கிறது இந்தப் புத்தகத் திருவிழா. 13 நாட்கள் நடந்த புத்தகக் காட்சியில் விற்கப்பட்ட புத்தகங்களின் மதிப்பையும், வாசகர்களின் கருத்துக்களையும் பார்க்கும்போது, பல்வேறு துறையினருக்கும் இந்தப் புத்தகக் காட்சி பலனளித்துள்ளது என்ற நிறைவைத் தருகிறது. புத்தகக் காட்சிக்கென்று பல்வேறு வசதிகளுடன், நிரந்தரமாக ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற பதிப்பாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.

- கி. ரெங்கராஜன்,சென்னை.

***

வாசகர் திருவிழாவை வாசகர்களிடம் மிக அழகாகக் கொண்டுசென்று, புத்தகத்தை நேசிப்பவர்களை இன்னும் அதிகம் நேசிக்க வைத்ததும், வாசிக்க நினைத்த வாசகர்களை புத்தகக் காட்சிக்கு வரவழைத்ததிலும் ‘தி இந்து’ நாளிதழின் பங்கு மிகமிக அதிகம்.

அதுவும் சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு வர இயலாத வெகுதொலைவில் உள்ள எங்களைப் போன்ற வாசகர்களுக்கு ‘வாசகர் திருவிழா - 15’ என்ற பெயரில் தினந்தோறும் ‘தி இந்து’ அளித்த செய்திகள், கட்டுரைகளால் புத்தகக் காட்சியில் நேரில் வந்து கலந்துகொண்டதுபோல் ஓரளவுக்கு மனநிறைவு ஏற்பட்டது.

கிரிக்கெட் மேட்சைப் பார்க்க இயலாதவர்கள் வானொலி வர்ணனையைக் கேட்டு மகிழ்வதைப் போன்ற மகிழ்ச்சியை ‘தி இந்து’வின் ‘வாசகர் திருவிழா’ பக்கங்கள் தந்தன. ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த ஆண்டின் இரண்டாவது திருவிழாவாக மதுரையில் நடைபெறவிருக்கும் புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய புத்தகங்களைப் பற்றிய ஒரு தெளிவை இந்த வாசகர் திருவிழா பக்கங்கள் எங்களுக்கு அளித்துள்ளன.

- வீ.சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x