Published : 22 Dec 2014 11:05 AM
Last Updated : 22 Dec 2014 11:05 AM

ஆசிரியர்களின் ஆசிரியர்

விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியனின் மறைவையொட்டி வெளியான ‘தமிழ் இதழியலின் பிதாமகன்’ எனும் கட்டுரை கண்ணீரை வரவழைத்தது.

ஒரு பத்திரிகை ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் எஸ். பாலசுப்ரமணியன். ‘மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்ட’த்தின் மூலம் திறமைவாய்ந்த இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்.

எழுத்தாற்றல், நிர்வாகத் திறமை ஆகியவற்றோடு தமிழ் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து, காலத்துக்கேற்றவாறு பத்திரிகையில் மாற்றங்கள் செய்து வாசகர்களைக் கட்டிப்போட்டவர். தமிழ் உலகம் உள்ளளவும் அவரது பெருமை நிலைத்து நிற்கும்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x