Published : 26 Dec 2014 10:19 AM
Last Updated : 26 Dec 2014 10:19 AM
எம்.ஜி.ஆர். பற்றி உளவியல்ரீதியில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அபாரம். பொதுவாக, திரைப்படப் பாடல்கள், வசனங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாகக் கருதப்பட்டு, சில மணி நேரம் அல்லது சில நாட்களில் மறக்கப்பட்டுவிடும்.
ஆனால், அதையே வாழ்வின் ஒரு அங்கமாகக் கொண்டு அதில் கவனம் செலுத்தி, அதன் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்று, அதை அரசியலுக்கும் பயன்படுத்தி மகத்தான வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே! அவரது பெயரை சொல்லிக்கொண்டு அரசியல் நடத்த முனையும் மற்ற நடிகர்கள் இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
- எஸ். ஸ்ரீதர்,சென்னை-59.
`எம்.ஜி.ஆர்:
காவிய நாயகன் உருவான கதை’ மிகவும் நுணுக்கமான கட்டுரை.செறிவான இந்தக் கட்டுரையில், `பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக் கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை’ என்ற வாக்கியம் அசாதாரணமானது. அவருடைய இந்தப் புரிதல்தான் அவருடைய எதிரிகளையும் அவருக்கு வாக்களிக்காதவர்களையும்கூட அவருடைய ரசிகர்களாகத் தக்க வைத்துக்கொண்டது எனலாம்.
- ஏம்பல் தஜம்முல் முகம்மது ,சென்னை-68
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT