Published : 04 Aug 2017 09:52 AM
Last Updated : 04 Aug 2017 09:52 AM

இப்படிக்கு இவர்கள்: இந்தியா ஏழைகள் இல்லாத நாடா?

 

ரொ

ட்டிக்கே வழியில்லாதபோது கேக் வாங்கி உண்ணுங்கள் என்ற மனோபாவம்தான் பிரதமர் மோடியின் செய்கையில் உள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் பற்றிய கணக்கெடுப்பு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே அன்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க அல்ல. காஸ் மானியத்தைத் தொடர்ந்து, மண்ணெண்ணெய் மானியம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்று சொன்ன மத்திய அரசின் கூற்று என்னாயிற்று? நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்க ஏகப்பட்ட கெடுபிடி விதித்திருப்பது, சிலிண்டர் மானியத்தை ரத்துசெய்வது போன்ற செயல்களால் இந்தியாவை ஏழைகள் இல்லாத நாடு என்று சொல்லிவிடலாம் என்று நினைப்பது சரியா?

- எம்.விக்னேஷ், மதுரை.

மருத்துவக் காப்பீட்டு பிரச்சினை

ஜூ

லை 30 நாளிட்ட தி இந்துவில் ‘புற்றுநோயால் பெண் தலைமைக் காவலர் உயிரிழப்பு, போலீஸாருக்குப் பயன்படாத மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்துக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள குறைபாடுகள் அனைத்தும் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ‘பொதுமக்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் ஓய்வூதியத் திட்டங்களிலும் உள்ளன. மருத்துவக் காப்பீடு குறித்து தமிழக அரசு செய்யும் விளம்பரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உண்மை நிலவரம் குறித்து விரிவான கட்டுரை வெளியிட்டால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.

- எம்.ஆ. சண்முகம், கோபிசெட்டிபாளையம்.

தமிழக மக்களின் எதிர்கால நிலை என்ன?

க. 2-ம் தேதி வெளியான, ‘இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ரேஷன் கிடைக்கும்?’ கட்டுரையில் கூறியுள்ளபடி எந்தவொரு சமூகநலத் திட்டத்தையும் மாநில அரசு நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. விவசாயிகள் நிவாரணம், நீட் தொடங்கி இன்று ஜிஎஸ்டி, காஸ் மானியம் ரத்து, ரேஷன் பொருட்கள் ரத்து என்று சொல்லிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. அதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய உரிமைகள் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு ஆட்டி வைக்கும் தலையாட்டிப் பொம்மைகளாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள் மாநில அமைச்சர்கள். தங்கள் பதவியைக் காப்பாற்றவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இப்படி இருக்கையில், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பார்கள்? தமிழக மக்களின் எதிர்கால நிலை என்ன?

- சு.சந்திரகலா, சிவகங்கை.

இப்போது என்ன செய்வார்கள்?

கஸ்ட் 2-ம் தேதி வெளியான, ‘பாலமா... பாபிலோன் தொங்கும் தோட்டமா?’ கட்டுரை அரசுத் திட்டங்களின் நிதியில் கமிஷன் பெறுகின்ற முறைகேடுகளை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தானே முன்வந்து வெட்டவெளிச்சமாக அம்பலப்படுத்தியதை விவரித்தது. இதன் மூலம் தற்காலத் தமிழக அரசியலில் மேலும் ஒரு கரும்புள்ளி ஆழமாகக் குத்தப்பட்டிருக்கிறது.

ஓர் ஊழல் காயம் ஆறுமுன்னே அடுத்தவொரு லஞ்ச காயம் தோன்றி, தமிழகம் புண்ணாகிப் புரையோடிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. நடிகர் ஒருவர் எழுப்பிய ஒரு குற்றச்சாட்டுக்கு அவரை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பவர்கள், இப்போது ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியே தமிழகத்தில் நிகழும் அழுகிய அவலங்களைப் பார்த்த அதிர்ச்சியில் அரசை நோக்கி இருபது கேள்விகளை அடுக்கியிருக்கிறாரே.. என்ன செய்யப் போகிறார்கள்? அவரையும் அரசியலுக்கு வர அழைப்பு விடுப்பார்களா?

- சாமி குணசேகர், அம்மாசத்திரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x