Published : 17 Aug 2017 09:16 AM
Last Updated : 17 Aug 2017 09:16 AM
பு
தன் அன்று வெளியான ‘குழந்தைகள் மரணத்தில் உங்களுக்குப் பொறுப்பில்லையா ஆதித்யநாத்?’ கட்டுரை, கோரக்பூர் மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக அலசுகிறது. ‘உயிர் காக்கும் சிகிச்சையிலும் கமிஷன் எதிர்பார்க்கிற, கமிஷனுக்காக உயிர்கள் போனாலும் கவலைப்படாத நிர்வாகம்தான் உத்தர பிரதேசத்தில் நடந்துகொண்டிருக்கிறதா?’ எனும் கட்டுரையாளரின் கேள்வி மிக முக்கியமானது. கோசாலைகள் கட்டுவதற்குக் கோடிக்கணக்கில் செலவுசெய்யும் அரசு, குழந்தைகளின் உயிர் காக்கும் சாதனங்கள் விஷயத்தில் ஏன் அக்கறை காட்ட மறுக்கிறது எனும் கேள்வி நம் எல்லோரிடமும் எழுகிறது.
- ராஜ்குமார், திருச்சி.
பொது இடத்தில் விழிப்புணர்வு
க
டவுளின் நாக்கு பகுதியில் வெளியான, ‘கண்களைத் திருப்புங்கள்’ (ஆக. 8) கட்டுரையில், சாப்பிடுவதற்காகவே பிறந்தவர்களையும் அதை வைத்த கண் வாங்காமல் பார்ப்பவர்களையும் பற்றி விவரித்திருந் தார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எதுவும் அளவைக் கடக்கிறபோது பிறரின் கவனத்தை ஈர்க்கவே செய்யும். இந்தக் கட்டுரையைப் படித்தபோது, ‘மாயா பஜார்’ திரைப்படத்தில் கல்யாண சமையல் சாதத்தைக் கபளீகரம் செய்யும் எஸ்.வி.ரங்காராவும், ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் பரோட்டா சூரியும் நினைவுக்கு வந்தார்கள். பொது இடத்தில் நுகர்வோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியதை, அழகாகச் சொன்னது கட்டுரை.
- தவமணி கோவிந்தராஜன், சென்னை.
தனியாரின் முகவரா அரசு?
ம
க்களைக் காக்க வேண்டிய அரசுகள், தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துத் தனியாருக்குத் தம் மக்களைத் தவணை முறையில் பலி கொடுத்துவருவதன் மற்றொரு வெளிப்பாடுதான் அரசு மருத்துவ மனைகளில் தனியார் பங்கேற்புத் திட்டம். இதுகுறித்து ஆகஸ்ட் 7-ல் வெளியான தலையங்கம் மிகச்சரியான எச்சரிக்கை. இந்த முயற்சியின் முன்னேற்பாடுகள் என்ற முறையில், மருத்துவக் காப்பீடுகள், ஒவ்வொரு சிகிச்சைக்கும் விலை பேசும் நிலை போன்றவை மலிந்துவருவதும், அரசும் அதற்கு உடன்படுவதும் அவமானகரமானவை. வரிப் பணம் தனியாருக்கே தாரை வார்க்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த நிலையிலும் அரசுகள் தனியார்களின் முகவர்களாக மாறக் கூடாது!
- எஸ்.துரைசிங், திண்டுக்கல்.
அகழ்வாய்வும் தமிழரும்
கீ
ழடி அகழ்வாய்வில் கிடைத்த 5,800 பொருட்களில் மதம் மற்றும் வழிபாடு சார்ந்த பொருட்கள் ஏதும் இல்லை. அதாவது, இயற்கை வழிபாடு கொண்ட காலத்திலேயே சிறந்த வளர்ச்சியடைந்த நகர நாகரிகம், தமிழகத்தின் வைகை நதிக்கரையில் இருந்திருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளது அகழ்வாய்வு. மத உணர்வுகளை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்துவரும் மத்திய ஆட்சியாளர்களுக்கு இந்த உண்மை கசக்கிறது. இந்தப் பின்னணியில், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வை நினைவுபடுத்தி ஆக.9-ல் வெளியான ‘மீண்டும் தோண்டப்படுமா ஆதிச்சநல்லூர்?’ கட்டுரை காலத்துக்கேற்ற பதிவு.
-நீ.சு.பெருமாள், எமனேஸ்வரம்.
வரலாற்றை மறைக்கும் முயற்சி
நீ
ரா சந்தோக் எழுதிய ‘முன்னெப்போதையும்விட ஏன் நேரு இப்போது அதிகம் தேவைப்படுகிறார்?’கட்டுரை ( ஆக.15) வாசித்தேன். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறப் போராடிய தலைவர்களில் முதன்மையானவரான மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்றவரின் வழிவந்த இரண்டாம் தலைமுறையினர், ஆட்சி அதிகாரத்தின் துணையோடு காந்தியையும் நேருவையும் வரலாற்றிலிருந்து மறைக்க முயல்கிறார்கள் என்பதன் மூலம், கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய ரவையின் சூடு, இன்னும் அவர்கள் ரத்ததில் ஓடுகிறது என்பதனை நாம் அறிய முடிகிறது. இந்தியாவின் மிகப் பெரிய தலைவர்கள் (மகா புருஷர்கள்)வரலாற்றை உத்தர பிரதேசத்தின் 10 லட்சம் பள்ளி மாணவர்களிடம் திணிக்க முற்படுவதன் காரணமும் இதுவே.
- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT