Published : 14 Jun 2016 10:40 AM
Last Updated : 14 Jun 2016 10:40 AM

எதிர்க் கருத்தையும் வாசிப்போம்

வாசிப்பின் அரசியல் கட்டுரையில் மருதன் கூறியிருக்கும் கருத்துகள் உண்மையே. தாங்கள் சார்ந்துள்ள கொள்கைகளையே ஆழமாகப் படித்தறியாமலும் எதிர்க் கருத்துகளை ஏறெடுத்தும் பாராமல் இருப்பதாலும்தான் தமிழ்நாட்டில் சித்தாந்தத் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

உலகில் இதுநாள்வரை தோன்றியுள்ள சிந்தனைகள், சித்தாந்தங்கள் அனைத்தும் எதிர்நிலையிலிருந்து தோன்றியவையே என்பது சிந்தனை வரலாற்றைத் தொடர்ந்து படித்தவர்களுக்குப் புரியும்.

தனது சித்தாந்தத்தால் உலகையே புரட்டிப்போட்ட கார்ல் மார்க்ஸ், தனது சமூகம் சார்ந்த பொருள்முதல்வாதக் கொள்கையின் விதிகளான, 1.அளவுநிலை மாறினால் பண்புநிலையும் மாறும். 2.வேற்றுமைகளின் ஒற்றுமை. 3.நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகிய இயக்கவியல் விதிகளை அவருக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய கருத்துமுதல்வாதத் தத்துவஞானியான ஹெகல் என்பாரிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்.

ஹெகல் உலக இயற்கையின் இயக்கத்துக்குக் காரணமான விதிகளை கண்டுபிடித்துக் கொடுத்ததைத்தான் கார்ல் மார்க்ஸ் சமூக மாற்றத்துக்குப் பொருத்தினார். எனவே, வாசிப்பு என்பது பரந்துபட்டதாக இருந்தால்தான் புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும்.

- மு.வாசுகி,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x