Published : 04 Jun 2016 11:26 AM
Last Updated : 04 Jun 2016 11:26 AM
குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கின் தீர்ப்பு எப்படியாயினும், ஒரு குற்றம் நடந்து 14 வருடங்களுக் குப்பின் தீர்ப்பு என்பதே ஒருவிதமான அநீதியாகத் தெரிகிறது. விரைவான விசாரணை மற்றும் தீர்ப்புகளுக்கு பொது மக்களாகிய நாமும், காவல், நீதித்துறை சார்ந்தவர்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட் டதாகவே தோன்றுகிறது. வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகளுக்குத் தடை போட்டாலே இந்த விஷயத்தில், பாதி கிணறு தாண்டிவிடலாம்.
- ஹாஜா முகைதீன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக..
மறுக்கப்படும் வளரும் உரிமை
உலக அளவில் கொத்தடிமைகளை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதேநேரத்தில், உலகில் உள்ள பணக்கார நாடுகளின் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. வாழும் உரிமையை வழங்கிவிட்டு, வளரும் உரிமையை மறுக்கும் நாட்டில் இந்த முரண்பாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.
- கி.நாவுக்கரசன், ராணிப்பேட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT