Published : 05 Jan 2016 11:14 AM
Last Updated : 05 Jan 2016 11:14 AM
மறைநீர் பற்றிப் படித்தேன். அருமையான கட்டுரை. எதிர்காலத்தில் ஒரு நாட்டுக்கும் மற்ற நாட்டுக்கும் சண்டை என்பது நீர் பிரச்சினைக்காக இருக்கும் என்ற கூற்று எனக்கு அப்போது பிடிபடவில்லை.
இந்தக் கட்டுரை படித்தபின் விளங்கியது. எந்த நாடு எதிர்காலத்தில் குறைவாக மறைநீர் உபயோகித்து சிறப்பான வழிகாட்டுதலோடு இருக்கிறதோ, அதுவே வல்லரசு என்பதில் சந்தேகம் இல்லை. உட்கார்ந்த இடத்தில், தொடுதிரையில் விரல் வைத்து, சூயிங்கம் மென்றுகொண்டு (ஒரு பெண் இப்படி சூயிங்கம் மென்றுகொண்டு ஆளில்லா விமானம் இயக்கி, டொம்மு டொம்மு என போட்டுத்தள்ளும் காணொளி பார்த்தேன்!) உலகின் ஏதாவது ஒரு மூலையில், மனிதர்களைக் கொன்றால், அதுதான் வல்லரசு என்றால், அந்தக் கனவு இந்தியாவுக்கு வேண்டாம்.
மறைநீர் பயன்பாட்டில் உலகளாவிய அளவில், மிகச் சிறந்த நாடு இந்தியா என்ற பெயர் வரலாற்றுப் பக்கங்களில் செதுக்கப்பட வேண்டும். மறைநீர் குறித்த விழிப்புணர்வுக் கட்டுரை அளித்த டி.எல். சஞ்சீவிகுமார் மற்றும் ‘தி இந்து’ குழுமத்துக்கு நன்றி! இந்தியர்கள், இவ்விஷயத்தில் உடனே விழித்துக்கொள்வது அவசியம்.
- பாலன், மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT