Published : 16 Jul 2016 10:17 AM
Last Updated : 16 Jul 2016 10:17 AM
வட கிழக்கு மாநில நிலை குறித்த கட்டுரையில் பிரதிபலித்த ஆதங்கம் நெஞ்சை கனக்கச் செய்தது. 1980-களில் அசாமில் நடந்த நீண்ட மண்ணுரிமைப் போராட்டம் மறக்க முடியாது. வங்கதேச ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்தவே அந்தப் போராட்டம்.
ஆனால், ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து அரசியல் லாபம் அடையும் முயற்சியில் காங்கிரஸ் இருந்தது. அசாம் கனபரிஷத் என்ற அமைப்பின் கீழ் மாணவர்கள் திரண்டதும், அடுத்தடுத்த நகர்வுகள் காங்கிரஸுக்குத் தோல்வியைத் தந்து, கல்லூரி மாணவரான பிரபுல்லகுமார் மெகந்தா முதல்வரானதும் வரலாறு. காட்சிகளும் ஆட்சிகளும் மாறின.
ஆனால், நிலமை இன்னமும் மோசமாகிவருகிறது. பல வருடங்களாக உணவு, தண்ணீரில்லாமல் காற்றை மட்டுமே சுவாசித்துப் போராடும் இரோம் ஷர்மிளா தீவிரவாதியா? அவரை அலட்சியப்படுத்தும் அரசுக்கு ஆன் சாங் சூயிக்கு மலர் தூவ என்ன தார்மீக உரிமை உள்ளது?
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT