Published : 05 Jan 2016 11:10 AM
Last Updated : 05 Jan 2016 11:10 AM
தன்னைப் பற்றிய அதீதமான உயர் மதிப்பீடுகள் ஏதுமின்றி, மிக இயல்பாக 84 வயதிலும் கதையுலகில் இயங்கிவரும் அசோகமித்திரன் என்கிற மூத்த தலைமுறை எழுத்தாளரின் ‘மவுனத்தின் புன்னகை’ தொடர் மிக அற்புதமாக ‘தி இந்து’வில் தொடங்கியுள்ளது மகிழ்வளிக்கிறது.
அவர் வாழ்வின் துயரங்களை உயரத்திலிருந்து பார்த்தவரல்லர். அவரது படைப்புகள் யாவும் அவருக்குப் பங்கேற்பு அனுபவம்தான். இத்தொடரும் சிறுகதையைப் போல் விறுவிறுப்பாக நகர்கிறது. அசோகமித்திரன், குறியீடுகளையும் பாத்திரங்களையும் வலிந்து திணிப்பவரில்லை.
சொல் விளையாட்டில் ஈடுபாடு கிடையாது. சொற்சுருக்கம் அவர் படைப்பின் தனித்துவம். வாசகர்களைச் சக படைப்பாளராக மதிக்கும் இயல்புடையவர். 50 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய படைப்பிலக்கியங்களை இன்று படித்தாலும் புதிதாக இருக்கின்றன. அசோகமித்திரன் சிந்தும் மவுனப் புன்னகைக்குப் பின்னால் இன்னும் என்னென்ன சோக ரகசியங்கள் வெளிவரப்போகின்றனவோ தெரியவில்லை. ஆவலோடு காத்திருக்கிறோம்.
- முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT