Published : 20 Jul 2016 05:39 PM
Last Updated : 20 Jul 2016 05:39 PM
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாமனிதரின் உன்னத வாழ்வை வெளிப்படுத்தும் பொருட்டு வெளியான 'மக்கள் தலைவர்' கட்டுரையும் 'ஞானத் தந்தைக்கு மரியாதை!' தலையங்கமும் படித்தேன். 'தி இந்து' நாளிதழின் பணி பாராட்டுக்குரியது.
வைக்கம் போராட்டத்தில் பெரியாருடன், கர்மவீரரும் இணைந்து செயல்பட்டார் என்பது போன்ற, வரலாற்றால் மற(றை)க் கப்பட்ட உண்மைகளும் வெளியாகியிருந்தன.
உன்னதத் தலைவராவதற்கு, மக்களோடு மக்களாக வாழ வேண்டும்; எளிமையைக் கைவிடாது காக்க வேண்டும்; இடைவிடாது மக்களை மனதில் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க வேண்டும்; எதிர்க் கட்சியினரின் கருத்துகளுக்கு, செவிகொடுக்க வேண்டும்; பதவி நம்மை அலங்கரிக்கக் கூடாது; நாமே பதவியை அலங்கரிக்க வேண்டும்; இதுபோன்ற மிக உயரிய கருத்துகளைத் தாங்கி வந்த கட்டுரை கர்மவீரரை, இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கொண்டுசேர்த்த வரலாற்றுப் பேழையாக அமைந்திருந்தது.
காமராஜரின் வாழ்வு படிக்க மட்டுமல்ல; பின்பற்றவும்தான் என்பதை ஆணித்தரமாகக் அடிக்கோடிட்டிருந்தது கட்டுரை.
- அ.மயில்சாமி, தமிழாசிரியர், கண்ணம்பாளையம்.
*
தூய வாழ்வு
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, இளைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருந்தோம் என்பதில் எங்களுக்குப் பெருமை.
காமராஜரைப் போல ஒரு தலைவரைத் தமிழகம் காணுமா என்பது சந்தேகமே. உடல் தோற்றத் தைப் போன்றே அவர் செயல்களும் எண்ணங்களும் உயர்ந்தே இருந்தன. அவர் அணிந்த உடையைப் போன்றே எளிமையும், தூய்மையும் வாழ்க்கைத் தத்துவமாகவே இருந்தன.
- கேசவ் பல்ராம், திருவள்ளூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT