Published : 20 Jun 2016 10:24 AM
Last Updated : 20 Jun 2016 10:24 AM
நித்தம் வாழ்வாதாரத்துக்காகப் போராடும் கடல் குடும்பங்களின் நிலையைக் கண்முன் நிறுத்தியுள்ளார் >‘கடலோடிகளின் குரல் எப்போது கோட்டையில் கேட்கும்?’ என்ற கட்டுரையாசிரியர் என்.சுவாமிநாதன்.
தேர்தல் சமயங்களில் மட்டும் மீனவர்களின் தேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியலின் போலி முகத்தையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். கடலோடிகள் அச்சமின்றி நிம்மதியாக வாழ அவர்கள் சார்பான குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
- சுபா தியாகராஜன், சேலம்.
****
‘கடலோடிகளின் குரல்…’ கட்டுரையில், சட்டமன்றத்தில் மீனவர் சமுதாயப் பிரதிநிதிகளாக இதுவரை இருந்து வந்துள்ள சிலரின் பெயரைக் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். அதில், எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மறைந்த ஜி.ஆர்.எட்மண்டையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இவரும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் பரதவர் குலத்தைச் சார்ந்தவர்தான். 1967, 1971 தேர்தல்களில் இவர் திருச்செந்தூர் தொகுதியிலிருந்தும், 1977-ல் நெல்லைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆரின் முதல் அமைச்சரவையில் உணவு அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.
- கே.எஸ்.முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT